“இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது” – அலி சப்ரி!

Read Time:1 Minute, 9 Second

பொருளாதார நெருக்கடியின் போது மற்றைய நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுத்ததாகவும், சுமார் 3.9 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு கடன் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்திய அரசாங்கம் துணிச்சலான முடிவுகளை எடுக்க முன்வந்தது மட்டுமல்லாமல், இந்திய மக்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் என்று குறிப்பிட்டார்.

இலங்கையை காப்பாற்ற இந்தியாவின் தலையீடு மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதாகவும், அலி சப்ரி கூறியுள்ளார்.

Previous post வவுனியாவில் தம்பதியர் மற்றும் இரு பிள்ளைகளின் மர்ம மரணம் – நீடிக்கும் மர்மம்!
Next post A / L பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் – சுசில் பிரேமஜயந்த!