இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை - லாஹூர் நீதிமன்றம் தடை உத்தரவு - Sri Lanka Muslim

இந்திய சினிமாக்களை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை – லாஹூர் நீதிமன்றம் தடை உத்தரவு

Contributors

பாகிஸ்தான் திரைப்பட தயாரிப்பாளர், முபாஷி? லுக்மான் என்பவர், லாகூர் உயர்நீதிமன்றத்தில், கடந்த மாதம், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்ய வேண்டும்’ என, அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சினிமா மற்றும் ‘டிவி’ தொடர்களை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, பாகிஸ்தான் ‘டிவி’ கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும், அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

high court of lahoor

 

பாகிஸ்தானில் வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு அந்நாட்டு லாஹூர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக இந்திய நிகழ்ச்சித் தயாரிப்புக்கள், திரைப்படங்களை சுட்டிக்காட்டி இவை அனைத்தும் பாகிஸ்தானுக்கு எதிர்மறையான பட்டியலில் உள்ளதால் அப்பட்டியலில் உள்ள தயாரிப்புக்களை இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதை பரிசீலித்து இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. (maalaimalar)

Web Design by Srilanka Muslims Web Team