இந்து ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர்களான டக்களஸ், றிசாட் ஜனாதிபதியிடம் முறைப்பாடு - Sri Lanka Muslim

இந்து ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர்களான டக்களஸ், றிசாட் ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Contributors

தம்புள்ள இந்து ஆலயம் ஒன்றினை நகர அபிவிருத்தி அதிகார சபை அகற்றியது தொடர்பில் அமைச்சர்களான டக்ளஸ் தேவாநந்தா மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தமது அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர்.
நேற்று கெபினட் அமர்வுக்கு சென்ற போதே இரு அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுபான்மை சமூகம் மீது நடத்தப்பட்டு வருகின்ற இவ்வாறான சம்பவங்கள் கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் கடும் போக்கான அதிகாரிகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

இது தொடர்பில் நமது இணையச் செய்தியாளர் இவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team