இந்த சிந்தனையை சரியாக வழிநடத்த அந்த மிருகங்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் கிடைத்திருந்தால் - Sri Lanka Muslim

இந்த சிந்தனையை சரியாக வழிநடத்த அந்த மிருகங்களுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் கிடைத்திருந்தால்

Contributors

-அதாஉல்லா அசார்-

 

ஒரு மிருகக் காட்சி சாலையிலே..

 


எல்லா மிருகங்களும் தாம் காட்டில் சுதந்திரமாக இருந்த காலத்தை மறந்து மிகச்சந்தோமாக, கூடுகளுக்குள்ளும், சில வெட்டியான எல்லைப் பகுதிகளுக்குள்ளும் முடங்கி காலம் கழித்து வந்தன.

 

எனினும்….
சில நினைனுவுகளும், எண்ணங்களும்
சில மிருகங்களிடம் வந்தன…

 

“நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்கவேண்டியவைகள்..
சிறைவாசம் அனுபவிக்கின்றோமே!!!
எம்மை கேளிசெய்கின்றனரே!!
எம்மில் எத்தனை பலசாலிகள்…, எத்தனை திறமைசாலிகள்..
எல்லோருமே கூடுகளுக்குள்
சிலரது சுயலாபத்திற்காக இரையாகியுள்ளோமே!!!
இது தான் எமது உலகமென இந்த அப்பாவி ஜீவிகளும் நினைத்து குதூகலமாய் காலம் தள்ளுகிறதே!!”

 

 

என சில மிருகங்கள் சிந்தித்தன…
காடு தான் எமதுலகம்!
அங்கே போய் வாழ்வதனால் மாத்திரமே எமக்கான முழு உரிமையும் கிடைக்கும்!

 

 

எனினும் நாம் போவற்கு முன் இந்த மிருகங்களுக்கு இது பற்றி உணர்த்திச், சொல்லவேண்டுமே என எண்ணி தமது “சிந்தனைப் புரட்சியை” செய்யத் துவங்கியது!

 

முதலில் எதிர்ப்பு….
கடுமையான எதர்ப்பு (ஏன் என்றால் இது தானே தாம் வாழும் சூழல் என அவை நம்பி இருந்தன

 

 

இவ்வாறு இருக்கையில்
சில கழுதைகள் அவை கூடுகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கவில்லை.
என்ன செய்தது என்றால்……
எல்லா மிருகங்களிடமும் “இது நமது காடு” என மிருகக் காட்சி சாலையின் ஒரு பகுதியை, அல்லது முழுவதையும் பிரகடனப் படுத்தியது……
நிலைமை தலைகீழாய் மாறியது…

 

 

இதன் ஆபத்தை தெரிந்து கொள்ளாத அப்பாவி மிருகங்களும் “இது நமது காடு” என்ற பிரகடத்திட்குப் பலியாகியது..

 

 

ஆனால் இந்த சிந்தனையை சரியாக வழிநடத்த அந்த மிருகங்களுக்கு ஒரு சந்தர்பம் கிடைத்திருந்தால்……ஒரு நல்ல தலைமைத்துவம் கிடைத்திருந்தால்……………………..!

 

 

Web Design by Srilanka Muslims Web Team