இந்த மாத இறுதியில் பால்மாக்களின் விலை அதிகரிக்க கூடும்? » Sri Lanka Muslim

இந்த மாத இறுதியில் பால்மாக்களின் விலை அதிகரிக்க கூடும்?

Contributors

இந்த மாத இறுதியில் பால்மாக்களின் விலை அதிகரிக்க கூடும் என கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான பால்மாக்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக உலக சந்தையில்  ஏற்பட்ட பால்மாக்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஐந்து பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்பை கோரியுள்ளன.

இதேவேளை, இதுதொடர்பான இறுதி தீர்மானம் விலை குழு கலந்துரையாடலின் போது மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் சேவை அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.(sooriyan fm)

Web Design by Srilanka Muslims Web Team