இந்த வருடம் ஹஜ் கிரியைகளில் ஒட்டகங்கள் அறுக்க தடை - Sri Lanka Muslim

இந்த வருடம் ஹஜ் கிரியைகளில் ஒட்டகங்கள் அறுக்க தடை

Contributors
author image

World News Editorial Team

தகவல் உதவி
சவுதி கெஜட்
சுவனப் பிரியன்

மெர்ஸ்’ நோய் குறிப்பாக ஒட்டகத்தின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் அந்த நோயைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்த வருடம் ஒட்டகம் ஹஜ் கிரியைகளில் அறுப்பதை சவுதி அரசு தடை செய்துள்ளது. அது தவிர்த்து ஆடு:, மாடு, போன்றவற்றை அறுத்து ஏழைகளுக்கு உணவாக அளிக்கலாம். மெர்ஸ் நோயின் தாக்கம் குறைந்தவுடன் வழக்கமாக ஒட்டகமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஹஜ் கிரியைகளுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.

இள வயது ஒட்டகத்திலிருந்து இந்த நோய் மனிதனுக்கு உடன் தொற்றிக் கொள்கிறது. கடந்த இரண்டு தினங்களில் இரண்டு பேர் இந்நோயால் இறந்துள்ளனர். 15 பேருக்கு இந்நோய் தாக்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தமிழகத்திலிருந்து ஹஜ்ஜூக்கு வருபவர்கள் முறையாக தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு உடன் வரும் மருத்துவர்களளின் அறிவுரைப்படி நடந்து கொள்ள அறிவுறுத்தப்டுகிறார்கள்.

 

Web Design by Srilanka Muslims Web Team