இன்டர்ஸ்கூல் - இலங்கையில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வட்ஸ்அப்குழு குறித்து பொலிஸார் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

இன்டர்ஸ்கூல் – இலங்கையில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வட்ஸ்அப்குழு குறித்து பொலிஸார் எச்சரிக்கை..!

Contributors

இலங்கையில் செயற்படும் ஐஎஸ் அமைப்பின் வட்ஸ்அப் உரையாடல்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள மேல்மாகாண புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்குழுவின் வட்ஸ் அப் உரையாடல்கள் குறித்த எச்சரிக்கையாகயிருக்குமாறு மேல்மாகாணத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளதாக மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.


இன்டர்ஸ்கூல் என்ற வட்ஸ்அப் குழு ஐஎஸ் அமைப்புடன் என தெரிவித்துள்ள அவர் யாரையாவது இணைந்துகொள்ளுமாறு அவர்கள் அழைப்பு விடுத்தால் அதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வட்ஸ்அப் குழு தொடர்பாக கிடைத்த தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என கருதப்படும் அனைத்து வட்ஸ்அப் குழு உரையாடல்கள் குறித்தும் கண்காணித்துவருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team