இன்னுமொரு சூதாட்டம்..! - Sri Lanka Muslim
Contributors

(கதிரவன்)

கல்முனை மாநகர மேயர் விவகாரம் எடுத்துவிட்டார்கள் முடிவு சாய்ந்தமருது

மக்கள் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் சிராஸ் மீராசாஹிப் தான் மேயர் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று.

இது இவ்வாறிருக்க கட்சி, இரண்டு வருட ஒப்பந்தம் என்றெல்லாம் பேசப்பட்ட

விடயங்கள் வெறும் செல்லாக்காசாகி காற்றில் பறந்துவிட்டது  ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன்தலைமைக்கும் இவ்வாறான விடயங்கள் ஒன்றும் புதியவை அல்ல அன்று இந்த தலைமை சரியாக தனது முடிவை  தீர்க்கமாக எடுத்திருந்தால் இன்று கல்முனை மாநகர மக்கள் குழப்பம் அடைந்திருக்கத் தேவை இல்லை.

பிச்சை காரனுக்கு காலில் புண் இருந்தால்தான் பிச்சை  எடுக்க இலகுவாக இருக்கும் அது போலவே  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு கட்சியில் பிரச்சினை இருக்க வேண்டும் அப்போதுதான் தலைவர் தலைவராக  இருக்கமுடியும்.

இன்று  ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகரத்திற்கு பாரிய துரோகமிழைக்க திட்டம் தீட்டி மறைமுகமாக இயங்கி வருகிறது  கடந்த காலம்களில்  மட்டுமல்ல தொடார்ந்தும் கல்முனை மாநகரத்தை ஏமாற்றியும் வந்துள்ளமையானது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

சரியான நேரத்தில் பிழையான முடிவை இலாவகமாக எடுக்கும் இத்தலைமைக்கும் கட்சிக்கும் இன்று பாரிய சவாலாக உள்ளது கல்முனை மேயர் விவகாரம். இப்பவும் சரியான முடிவு எடுக்கப்படுமா என்றால் பாலைவனத்தில் குளிர்ந்த நீர் தேடுவதை  போல் ஆகும்

கல்முனை மேயர் விவகாரத்தில் சிராஸ் மீராசாஹிப் மேயராக சத்தியப் பிரமாணம் செய்யும் வேளையிலே தான் நான்கு வருடங்கள் மேயராக இருப்பேன் என தனது உள்ளத்தில் முதல் சத்தியப் பிரமாணம் செய்த பின்புதான் கட்சியின் கனவான் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அதற்கு சான்றுகள் இன்று இடம்பெறும் விடயங்கள்.

மேயர் சிராஸ் அவர்களை  தனது மேயர்  பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தலைவரால் பணிக்கப்பபட்ட போது இவர் இராஜினாமா செய்திருந்திக்க  வேண்டும் மாறாக தான் மேயர் பதவியை இராஜினாமாச் செய்வது குறித்து  சாய்ந்தமருது மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று தலைமைக்கு மேயரால் எடுத்துரைக்கப்பட்டது அதற்கிணங்க தலைவரால் அதற்கான  கால அவகாசமும் மேயர் சிராசுக்கு வழங்கப்பட்டிருந்தது

இவை எல்லாவற்றிற்கும் மேலாக மேயர் சிராஸ் அவர்கள் தேர்தல் ஆணையாளரை சந்தித்த விடயமானது பல்வேறு பட்ட விடயங்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கவேண்டியும் உள்ளது அது மட்டுமல்லாது ஜனாதிபதியையும் இவர் தனியாக சென்று சந்த்தித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர் அந்த  வகையில் இதில் ஏதோ அரசியல் விளையாட்டு ஒன்று விளையாட தயாராகி வருவதையும் அதற்கு தேவையான ஏற்பாடுகளையும் தற்போது மேயர் சிராஸ் மேற்கொண்டு வருகின்றார் என்பது திட்டவட்டமான விடயமாகுக்ம்

இவை ஒன்றும் கட்சிக்கும் தலைமைக்கும் தெரியாத விடயமும் அல்ல  இன்று மேயர் சிராஸ் அவர்கள் மீண்டு ஒரு மக்கள் ஆதரவு தேடல் பணியல் களமிறங்கியுள்ளார் காரணம்  ஒரு வேளை கட்சி தன்னிச்சையாக மேயர் விடயத்தில் தனக்கு  பாதகமான அல்லது தன்னை மேயர் பதவியில் இருந்து கட்சி நீக்கிவிடும் பட்சத்தில் இவரால் திட்டமிட்டு  வைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த மக்கள் பேராதரவு தேவைப்படும் அந்த நேரத்தில் நிட்சயமாக மேயர் சிராஸ் கட்சியின் நலனை பார்க்கமாட்டார் மாறாக அவரது சொந்தநலனை  மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுவார் கட்சியை தனியாக நின்று எதிர்க்காமல் மக்கள் ஆதரவுடன் மாற்றுக் கட்சியின் கொள்கையை  கடைப்பிடித்தவராக களத்தில் குதிக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம் இதற்கு எவ்வளவு தூரம் மக்கள் இவருக்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதை காலம் தான் பதில் சொல்லும் ஒரு வேளை மக்கள் ஆதரவு தனக்கு இரிக்கின்றது என நினைத்து  இறங்கினாலும் ஆச்சரியப்படத்தேவை இல்லை. இதற்கு சான்றாக  மேயர் சிராஸ் சமீபத்திய காலங்களில்  மேற்கொண்ட  அரசியல் முக்கிய புள்ளிகளின் தனியான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் சான்று பகிரும்.

இன்று கல்முனை மேயராக இருக்கின்ற இரண்டு வருடத்திற்கு  சிராஸ் மீராசாஹிபா அல்லது நிசாம் காரியப்பரா என்ற கனவான் ஒப்பந்த்தத்திற்கு சாய்ந்தமருது மக்கள் தீர்வு கண்டிருக்கும் வேளையில் கட்சியும் அதன் தலைமை, உயர்சபை என்ன முடிவெடுக்கப்போகிரார்கள்  என்ற கேள்விக்கு விடை தெரியாமல் கல்முனை மாநகரம் பெரும் சூதாட்ட களமாக காணப்படுகிறது  மேயர் விடயத்தில் கல்முனை மக்கள் அமைதி காப்பதும் இன்னுமொரு சூதாட்டமாக  உள்ளது.

மேயர் சிராஸ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாடை மீறி செயல் படுவாராயின் கட்சி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தயங்காது ஆனால் எது வரைக்கும் சாத்தியம் என்றுதான்  இன்று  புரியாத புதிராக உள்ளது.கட்சி மேயர் சிராஸ் விடயத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் சில வேலை மேயர் சிராசுக்கு பாதகமான முறையில் அமையும் பட்சத்தில் மேயர் சிராஸ் தனிமைப் படுத்தப்படுவார் என்பது  ஒருபுறம்  இருக்க கட்சிக்குள்ளேய மேயர் சிராஸ் விடயத்தில்  பல காய்  நகர்த்தல்கள்  இடம்பெறாமலும் இல்லை அனால் மொத்தத்தில் இவர் கட்சிக்கு விசுவாசமானவரா என்பது இன்று கேள்விக் குறியாகிவிட்டது என்பது மட்டும் உண்மை.

மேயர் சிராஸ்  கனவான் ஒப்பந்த்தத்தில்  விட்டுக் கொடுத்து நடக்கும் பட்சத்தில் இவருக்கு இன்னுமொரு உயர்வும் கட்சியில் நன்மதிப்பும் கிடைப்பதுடன் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு உள்ளவராக வலம்  வருவார்

அப்போது  இவர் காணும் அரசியல் கனவும் நனவாகும். மாறாக நடக்கும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்தும்  கேள்விக்குறியே ? .

Web Design by Srilanka Muslims Web Team