இன்று உலக கண்பார்வை தினம்! - Sri Lanka Muslim
Contributors

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

இலங்கையில் 1,50,000 பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுவதுடன், பாடசாலை மாணவர்களில் 4,50,000 பேர் பார்வை குறைந்தவர்களாக உள்ளதா கவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இன்று உலக பார்வை தினமாகும். உங்கள் கண்களை பரீட்சித்துக்கொள்ளுங்கள் என்ற தொனியில் இம்முறை பார்வை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் 6250 மில்லியன் சனத்தொகை யில் 39 மில்லியன் பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையைப்போன்ற வளர்முக நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

கண் வெண்படலம், நீரிழிவு போன்ற வற்றால் ஏற்படும் கண் நோய்கள், க்ளோகோமா போன்ற நோயினாலும் கண்கள் பார்வை இழந்து போவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஆரம்பத்திலேயே நோய்களை இனங் கண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் பார்வை இழப்பைத் தடுத்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

சர்வதேச செயற்திட்டமான விஷன் 2020 திட்டம் இலங்கையிலும் நடை முறைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க நாடுமுழுவதிலும் கண் பார்வை, கண்நோய்கள் தொடர்பான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் 1,50,000 பேர் பார்வை இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். பாடசாலை மாணவர்களில் 4 இலட்சத்து 50,000 பேர் கண் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50,000 மாணவர்கள் பார்வை குறைந்த நிலையில் உள்ளனர்.

உலக பார்வை தினமான இன்றைய தினத்தில் கொழும்பு கண் ஆஸ்பத்திரியில் விசேட நிகழ்வுகள் அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவின் தலைமையில் நடைபெற வுள்ளன. அத்துடன் கண்நோய் பரீட்சிப்பு தொடர்பான விசேட பிரிவும் கண் இரசாயன கூடமும் அமைச்சரினால் திறந்துவைக்கப்படவுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team