இன்று சர்வதேச சிறுநீரக நோய் தினம் - Sri Lanka Muslim
Contributors

உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றினை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதன் மூலம் சிறுநீரக நோயை குறைத்துக்கொள்ள முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

 

எவ்வாறாயினும், சிறுநீரக நோய்க்கு உரிய சிகிச்சைகள் மற்றும் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது அவசியமானது என பாலித்த மஹிபால குறிப்பிட்டார்.

 

சிறுநீரக நோய் ஏற்படுவதனை தடுப்பதற்கு புகைப்பிடித்தலை தவிர்த்துக்கொள்ளுமாறும், அதிகளவில் நீரை அருந்துமாறும் சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் டொக்டர் ரஜீவ் தஸநாயக்க தெரிவித்தார்.

 

சீறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்கான வெற்றிகரமான சிகிச்சை முறைகள் காணப்படுவதாக விசேட நிபுணர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team