இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் புதிய விலை அறிவிப்பு..! - Sri Lanka Muslim

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மாவின் புதிய விலை அறிவிப்பு..!

Contributors

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 1 கிலோ பால்மா பக்கெற்றின் திருத்தப்பட்ட விலை ரூ.1,345 ஆகவும், 400 கிராம் பக்கெற் ஒன்றின் விலை ரூ.540 ஆகவும் உயரவுள்ளன.

உலகச் சந்தையில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதால், தற்போதைய விலையில் தொடர்ந்து பால்மாவை வழங்க முடியாது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team