இன்று மாலை அமைச்சு பதவியை ஏற்கிறார் தம்மிக்க பெரேரா..! - Sri Lanka Muslim

இன்று மாலை அமைச்சு பதவியை ஏற்கிறார் தம்மிக்க பெரேரா..!

Contributors
author image

Editorial Team

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக, இன்று மாலை (24) ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அவ்வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் திகதி அவர் சபாநாயகர் முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team