இன்று முதல் பீப்பாய்கள், கான்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது! - Sri Lanka Muslim

இன்று முதல் பீப்பாய்கள், கான்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது!

Contributors

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இன்று முதல் 14 ஆம் திகதி வரையில், பீப்பாக்கள் மற்றும் கான்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் அனுமதியுடன் வழங்கப்படும்.

எரிபொருள் இன்றி பயணத்தை தொடர முடியாமல் இடைநடுவில் நிற்கும் வாகனங்களுக்காக கான்களில் எரிபொருள் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் ,இவ்வாறான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடை முறை ஏற்கனவே நடைமுறையில் உண்டு. எரிபொருள் இன்றி பயணத்தை தொடர முடியாமல் இடைநடுவில் நிற்கும் வாகனங்களுக்கு வாகன இலக்கம் முதலான விபரங்களை சமர்ப்பித்தால் எரிபொருள் வழங்கப்படும், ஆனால்  இன்று முதல் 14 ஆம் திகதி வரையில் ,பீப்பாய்கள் ,கான்களில் எரிபொருள் பெறுதற்கு அனுமதிக்கப்பட்ட மாட்டாது என்றார்.

பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு இடம்பெறாது என்பதால் எரிபொருளை தேவையில்லாமல் சேகரித்து வைப்பதை தவிர்க்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்’ போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10ஆயிரம் லீற்றர் எரிபொருள்ள கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்

எனினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளை நிரப்பும் நிலையங்கள் மாத்திரமே களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். தனிப்பட்ட முறையில் எரிபொருளைச் சேகரித்து வைக்கும் எந்த அதிகாரமும் மக்களுக்கு இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மேலும் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team