இப்படி கை கூப்பி வாழ்த்துக் சொல்வது வணக்கமல்ல; ஆகுமானது என்று யாரால் சொல்ல முடியும். - Sri Lanka Muslim

இப்படி கை கூப்பி வாழ்த்துக் சொல்வது வணக்கமல்ல; ஆகுமானது என்று யாரால் சொல்ல முடியும்.

Contributors

இப்படி கை கூப்பி வாழ்த்துக் சொல்வது வணக்கமல்ல; ஆகுமானது என்று யாரால் சொல்ல முடியும்.

மலேசியா இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் மத்தியில் இம்முறை ஒரு கலாச்சார நடைமுறையாக இன்றும் உள்ளது.

2017 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நான் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஒரு சின்ன பட்ஜட் ஹொட்டலில் தங்கியிருந்த போது தேசிய மீலாத் விழாவை தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தேன். தலைநகருக்குரிய மாகாண பெரிய பள்ளியில் மலேசிய மன்னரின் தலைமையில் அந்த தேசிய மீலாத் விழா நடந்தது. அங்கு தேசிய மட்டத்தில் பங்களிப்புக் செய்த துறை சார் அறிஞர்களுக்கான விருந்து வழங்கல் நிகழ்ச்சியும் நடந்தது.

அங்கு பல பேராசியர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. விருந்து பெற அழைக்கப்பட்ட போது ஒவ்வொரு பேராசிரியரும் தங்களது நெற்றிமேல் இரு கரங்களையும் கூப்பி வாழ்த்துக் சொன்னவர்களாகவே முன்னே வருவதைக் கண்டு அதிர்ந்து போனேன். அதிலும் அபாயாவும் ஹிஜாபும் அணிந்த ஒரு பெண்ணும் தன் நெற்றியின் மேல் இரு கரங்களையும் கூப்பி மன்னருக்கு வாழ்த்து தெரித்த போது! இறைவனின் இல்லத்தில் அதுவும் ஒரு முஸ்லிம் நாட்டில் என்ன நடக்கிறது? என்ற திகைப்பில் பலருடனும் கதைத்த போது அவர்கள் மிகத்தெளிவாக இது நமது கலாச்சாரம் என்று கூறினார்கள்.

ஆனால் இங்கோ எல்லாம் வணக்கமாக; எல்லாம் ஷிர்க்காக; எல்லாம் ஹராமாக ? என்ன அநியாயம்?

Web Design by Srilanka Muslims Web Team