இரகசியமாக புத்தகம் எழுதும் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim

இரகசியமாக புத்தகம் எழுதும் ரவூப் ஹக்கீம்

Contributors
author image

ஊடுருவி

நீதி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹகீம் இரகசியமான முறையில் புத்தகம் ஒன்றை எழுதி வருவதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

 

எவருக்கும் தெரியக் கூடாது என்ற அடிப்படையில் மிக மிக இரகசியமாக எழுதப்பட்டு வரும் இப்புத்தகம் தொடர்பில் கட்சி வட்டாரத்திற்குள் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதுடன் பெரும் எதிர்பார்ப்பையும் தோற்றுவித்துள்ளது.

 

மு.காவுக்குள் தனது தலைமைத்துவத்தை மிக அழுத்தமாக தக்க வைப்பதற்காகவே இந்நூலை தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதி வருவதாக குறித்த நூலை தட்டச்சு செய்யும் அந்த நபர் தனக்கு நெருக்கமான சிலரிடம் எத்தி வைத்துள்ளார்.

 

மு.கா வரலாற்றில் – தனது வருகையையும் , தனது பங்களிப்பையும் மூடி மறைக்க கட்சியின் ஆரம்பகால ஸ்தாபகர்கள் சிலர் திட்டமிட்டு முயற்சித்து வருவதை அறிந்தே இந்நூலை ரவூப் ஹக்கீம் எழுதக் காரணம் என மேலும் தெரியவருகின்றது.

 

புத்தகத்தின் உள்ளடக்கம் இது வரை தட்டச்சு செய்யப்பட்ட விபரம் போன்ற தகவல்கள் மிகவிரைவில் எம்மால் பதிவேற்றம் செய்யப்படும் என சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தள வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

Web Design by Srilanka Muslims Web Team