இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிரதமர் மஹிந்தவை சந்திக்க மறுப்பதாக காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு பிரதமருக்கு கடிதம்..! - Sri Lanka Muslim

இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிரதமர் மஹிந்தவை சந்திக்க மறுப்பதாக காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு பிரதமருக்கு கடிதம்..!

Contributors

இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுப்பதாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல முன்னணி செயற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்ட கடிதத்தின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தில் உள்ள அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.

தமது பிரதான இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் கோட்டகோகம போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அறிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team