இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த பசுமைத் தேயிலையினால் முடியும்-நாலந்தா மாணவனின் சாதனை - Sri Lanka Muslim

இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த பசுமைத் தேயிலையினால் முடியும்-நாலந்தா மாணவனின் சாதனை

Contributors

 

 

லியூகீமியாவை அதாவது இரத்தப்புற்று நோயை குணப்படுத்துவதற்காக இலங்கையின் பச்சைத் தேயிலை Green Teaயில் அடங்கியுள்ள   “Katachin”  கெடச்சின் என்ற இரசாயனப் பதார்த்தத்தை பயன்படுத்த இயலுமென நெனோ தொழில்நுட்பத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்ட நால ந்தா கல்லூரி மாண வன் ரக்கித்த மாவேன தமது ஆராயச்சியை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பித்துள்ளார்.

 

 

மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவ மாணவர்கள், சுகாதார தொழில் வல்லுனர்களை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஊக்கிவிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். மாணவன் மாவேலனைக்கு இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி அமைச்சினால் வழங்கப்படுகிறது.

 

 

இந்த மாணவனின் ஆராய்ச்சி இவ்வாண்டில் இலங்கையின் சிறந்த வைத்திய ஆராய்ச்சியாகப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க லொஸ் ஏன்ஜல்ஸில் இளம் விஞ்ஞானிகளின் புதிய ஆராயச்சிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தத் திட்டம் தெரிவாகியுள்ளது. தேசிய சுகாதார வாரத்தின் பாடசாலை மாணவர் தினத்தை ஒட்டி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றது.

 

 

அமைச்சர் மாணவர்களைப் பாராட்டினார். அரசு எப்போதும் நாட்டின் குழந்தைகளை நினைத்தே நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அரசு சிறந்த விடயத்தை மேற்கொண்டால் நன்மைகள் பிள்ளைகளுக்குக் கிடைக்கின்றன.

 

 

தீமை செய்தால் அதன் பிரதிபலன்களும் பிள்ளைகளுக்கே கிடைக்கின்றன. இத்தகைய திட்டம் ஒன்றை செய்த திறமையான மாணவருக்கு அரசின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team