இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவை 'சாபமிட்டு' விரட்டிய பொது மக்கள்..! - Sri Lanka Muslim

இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவை ‘சாபமிட்டு’ விரட்டிய பொது மக்கள்..!

Contributors

அம்பாறை, ரஜவாவி பகுதியில் மீன் குளங்களை அமைக்க முயற்சி செய்த இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவை அப்பகுதி மக்கள் சாபமிட்டு, கூச்சலிட்டு விரட்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதி விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் பெறும் வழியை மறைத்து மீன் குளங்களை அமைத்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டு வந்த நிலையில் குளங்களுக்குள் மீன்களை போட வந்த அமைச்சரையே இவ்வாறு விரட்டியடித்துள்ளனர்.

பொலிஸ் காவலோடு வந்து மக்கள் நலன்களை சூறையாடுவதாக பிரதேச விவசாய மக்கள் கொதித்தெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team