இராஜினாமா செய்துள்ளதை எழுத்துமூலம் அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான்!

Read Time:2 Minute, 33 Second

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், நாடாளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் , கொழும்பு மாநகர சபையில் போட்டியிடவுள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்தார்.

கட்சியின் செயற்குழு எடுத்த ஏகமானதான முடிவின் பிரகாரம் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் இன்று(20) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார்.

கொழும்பு தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹொமட் முஜிபுர் ரஹூமான் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

கௌரவ முஜிபர் ரஹூமான் அவர்களின் கடிதத்துக்கு அமைய பதவி விலகல் 2023 ஜனவரி 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (1)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இது பற்றி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முஜிபுர் ரஹ்மானின் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Previous post எக்காரணத்தை கொண்டும் தேர்தல் தடைப்படாது” – எஸ். பி!
Next post ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு நிகழ்வு – ரணில் நிகழ்த்திய அதிரடி உரை!