இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் புகழாரம்! - Sri Lanka Muslim

இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் புகழாரம்!

Contributors

பொதுமக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிடாத வகையில் பாதுகாப்பினை வழங்கி, இராணுவம் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெலவத்தை, அகுரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதுடன், மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் வேலைத்திட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னெடுக்க வேண்டும்.

அத்துடன், நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதுடன், அடுத்த வருட இறுதிக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தில் ​​பிரதமர் தினேஷ் குணவர்தனவும் பங்கேற்றுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team