இராமநாதபுரத்தில், சிலாபம் சாஹிப் சித்துபரிதா எழுதிய நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

இராமநாதபுரத்தில், சிலாபம் சாஹிப் சித்துபரிதா எழுதிய நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

Shahul Hameed (India Reporter)

திருச்சி

இந்தியாவில் உள்ள இராமநாதபுரத்தில் இலங்கை சிலாபத்தைச் சேர்ந்த தம்பி சாஹிப் சித்துபரிதா எழுதிய இஸ்லாமிய தத்துவ முத்துக்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி நிர்வாகிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவைச் சேர்ந்த இராமநாதபுர மாவட்ட கீழக்கரையைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது தம்பி சாஹிப் மூத்த மகன் சித்தி பரிதா இவர் இலங்கை சிலாபத்தில் சிறுவயதில் இருந்து குடும்பத்துடன் தனது மகன், மகள்களுடன் வசித்து வருகிறார்கள். இவருக்கு ஆரம்பகால முதலே இவருக்கு கவிதை எழுதும் பழக்கம் கொண்டவர். சிறுவயதில் இருந்து பல கஷ்டங்களை அனுபவித்து இறுதியாக இவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு இப்போது வயது 63ஆகும் குறிப்பிடத்தக்கது. இவருடைய நீண்ட கால ஆசையான தனது சொந்த மாவட்டத்தில் இவர் எழுதிய புத்தகத்தை வெளியிட வேண்டும் ஆர்வம் காரணமாக இராமநாதபுரத்தில் புத்தகம் வெளியீட்டு விழா நவாப் கிச்சன் ஹாலில் நடைபெற்றது.

விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஹாஜி அஸ்மாபாக் அன்வர்தீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை ஜெனிபர் ராஷியா அசாருதீன் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். எம்.எ.எஸ் முகம்மது அசாருதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.இராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்தவரும் இலங்கை சிலாபத்தில் வசித்து வரும் தம்பி சாஹிப் சித்தி பரிதா எழுதிய இஸ்லாமிய தத்துவ முத்துக்கள் என்ற நூலை கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் ஹாஜியானி முனைவர் சுமையா புத்தகத்தை வெளியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அண்ணன் மகள் ஹாஜியானி முனைவர் நசீமா மரைக்காயர் , ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஏ.கே காஜா நஜ்முத்தீன், உதவிச் செயலாளர் ஹாஜி ஜமால் முகம்மது, முதல்வர் முனைவர் முகம்மது சாலிகு, மதுரை மாட்டுத்தாவணி ஹோட்டல் வசந்தம் உரிமையாளர் சிராஜுதீன், டாக்டர் பாத்திமா சின்னதுரை அப்துல்லா ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.பின்னர், இவர்கள் அனைவரும் புத்தகத்தை பற்றி பேசுகையில் : இந்த புத்தகத்தை நாங்கள் பார்க்கும் அனைத்து வரிகளும் அருமையாக இருந்தது. பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்த புத்தகத்தை எப்படி எழுதினீர்கள் என்றும் கேட்கும் போதும் தஹஜ்ஜத் தொழுகை பிறகு நான் எழுதுவேன் கூறினார்கள். ஆனால், இந்த 62வயதிலும் தவறாமல் தஹஜ்ஜத் தொழுகை கடைபிடித்து வரும் இந்த பரிதாவிற்கு மேலும், பல புத்தகங்களை எழுதுவதற்கு அல்லாஹ்வின் கிருபையால் தைரியம் பெறுவதற்கும் அனைவரும் துஆ செய்ய வேண்டும். இந்த புத்தகத்தை அனைத்து மகளிர் மற்றும் அரபி மதரஸாக்களை இந்த புத்தகத்தை இடம் பெற செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் தினமும் படிக்க வேண்டும். என்றும் கூறினார்கள்.

விழாவில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி நிர்வாகம் சார்பில் விடுதியில் தங்கி படிக்கும் பெண்களுக்கும் வழங்க 80புத்தகங்கள் வாங்கினார்கள். பின்னர் தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரிக்கு வரும் கல்வி ஆண்டில் 400புத்தகங்கள் வாங்கப்படும் என்றும் உறுதி கூறினார்கள்.

விழா இறுதியில் நூல் வெளியீட்டாளர் தம்பி சாஹிப் சித்தி பரிதா ஏற்புரை நிகழ்த்தையில் இந்த புத்தகத்தை மிகவும் கஷ்டப்பட்டு எழுதினேன். அதற்கு பலனாக நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்ததாக இரண்டாவது புத்தகமாக 53தொகுப்புகளை எழுதி வைத்துள்ளேன். அதை புத்தகமாக கொண்டு வர அடுத்த கட்ட பணிகளை செய்ய உள்ளேன். எனக்கு எல்லோரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முகம்மது, ராம்கோ முன்னாள் தலைவர் ஷேக் முகம்மது, மலேசியாவைச் சேர்ந்த ஜமால் முகம்மது, இலங்கையைச் சேர்ந்த வீரகேசரி நாளிதழின் இணை ஆசிரியர் ரேணுகா பிரபாகரன், ஊடகவியலாளர் உடப்பூர் வீர சொக்கன், இராமநாதபுரம் கேணிக்கரையைச் சேர்ந்த ஹமீது முஹம்மது ரிஸ்வான், புத்தாநத்தம் சமூக சேவகர் முஹம்மது இப்ராஹீம், மற்றும் கீழக்கரை மற்றும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜமாஅத் தலைவர் உலமா பெருமக்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை திருச்சி செய்தியாளர் எம்.கே ஷாகுல் ஹமீது தொகுத்து வழங்கினார். விழா முடிவில் துஆ ஓதப்பட்டது.

b b.jpg2 b.jpg2.jpg3

Web Design by The Design Lanka