இரு மாகாணங்களுக்குமான அரசாங்க தரப்பு வேட்பாளர் பட்டியல் அடுத்தவாரம்! » Sri Lanka Muslim

இரு மாகாணங்களுக்குமான அரசாங்க தரப்பு வேட்பாளர் பட்டியல் அடுத்தவாரம்!

Contributors

தெற்கு மற்றும் மேல் மாகாண சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் கூடவுள்ள வேட்பாளர் தெரிவுக் குழு கூட்டத்தில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அக்கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானம் மத்திய குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். பட்டியல் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியிட்டு வைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மாகாண சபைகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த 20ஆம் திகதி நடத்தப்பட்டது. இதில் 515 பேர் நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team