இரு ஹரம் ஷரீப்களில் ரமழானில் இஃதிகாப் இருக்க பதிதல் (விபரம் இணைப்பு) - Sri Lanka Muslim

இரு ஹரம் ஷரீப்களில் ரமழானில் இஃதிகாப் இருக்க பதிதல் (விபரம் இணைப்பு)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-புனித மக்காவில் இருந்து..
மெளலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)ஜே.பி, காத்தான்குடி-


ரமழான் மாதத்தில் இஃதிகாப் இருக்க விரும்புகிறவர்கள் அதற்கான வழிமுறைகள், வசதிகள் மற்றும் பதிவு செய்யும் வழிமுறைகள் அறிந்துக் கொள்ள ஹரமைன் ஷரீஃபின் விவகாரங்களை கவனிக்கும் துறை, இணைய தளத்தில் அதற்கான வசதி செய்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் இஃதிகாப் இருப்பவர்களுக்கு ஹரமைன் ஷரீஃபின் விவகாரங்களை கவனிக்கும் துறை சிறப்பான வசதிகள் செய்து தருகிறது. அதற்கான வழிமுறைகளை நல்ல முறையில் அறிந்துக் கொள்ளும் பொருட்டு இணைய தளத்தில் 5 மொழிகளில் வசதி செய்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள உபயோகியுங்கள் :

இத்திகாஃப் பதிவு 2017 : http://eservices.wmn.gov.sa:8081/eservices/ittikaf

இவ்விணைய தளத்தில் உங்களைப் பற்றிய சில விவரங்களை அளித்து அந்தந்த வருடங்களில் இஃதிகாப் இருக்க பதிவு செய்யலாம்.

ஹரம் ஷரீஃபின் கீழ் தளம் இஃதிகாப் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தனித்தனி ஷெல்ஃப், பாதுகாப்பு பெட்டக வசதி செய்யப்பட்டுள்ளது. இஃதிகாப் இருப்பவர்களுக்கு தனித்தனியாக தங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ள சொந்த சாவியுடன் கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு தொழுகை விரிப்பு (ஜானிமாஸ், Prayer Rug), தலையணை, மெல்லிய படுக்கை விரிப்புகள் மற்றும் 2 இஹ்ராம் உடைகள் போதுமானது.

ரமழான் 20ந் தேதியிலிருந்து ஈதுல் ஃபித்ருக்கு முந்திய இஷா தொழுகைக்கு பிறகு வரை இஃதிகாப் காலமாகும்.

இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சில வழிமுறைகள் :

1- மஸ்ஜிதின் சுத்தத்தை பராமரிக்க வேண்டும்.
2- எதையும் சத்தமாக விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்.
3- இஃதிகாபில் மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் விஷயங்களை தவிர்க்கவும்.
4- அதிகப்படியான சுமைகளை கொண்டு வரவேண்டாம்.
5- நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இஃதிகாப் இருக்கவும்.
6- துணிகளை அங்கு நடமாடும் இடங்களிலும் (Corridors) தூண்களிலும் தொங்கவிட வேண்டாம்.
7- தஹஜ்ஜுத் தொழும் இடங்களில் படுக்க வேண்டாம்.
8- ஃபுளு, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு தாங்களே மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லது.
9- மஸ்ஜிதில் ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.
10- மிஸ்வாக் வைத்துக் கொள்ளுங்கள்.
11- பைகள்/சூட்கேஸ்கள் கொண்டு வர அனுமதி இல்லை. உங்கள் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வரலாம்.
12- ஸஹர் மற்றும் இஃப்தாருக்கு மஸ்ஜிதிற்கு வெளியே உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன, சாப்பிடும் பொருட்கள் கொண்டு வந்து சேகரிக்க வேண்டாம்.
13- மஸ்ஜிதிற்கு வெளியில் இருக்கும் கடைகளில் சாப்பிடும் பொருட்கள் வாங்க விரும்புகிறவர்கள் அதற்கான பணத்தை கொண்டு வரவேண்டும்.
14- டிஷ்யு பேப்பர்களை தங்களே வைத்துக் கொள்ள வேண்டும்.
15- இஃதிகாப் இருக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்துவிட வேண்டும். ஒரு நாள் முன் வந்துவிட்டால் இஃதிகாஃபிற்கான வழிமுறைகளை நேரடியாக புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

ஆன்லைனில் இஃதிகாப் பதிவு செய்ய :

http://eservices.wmn.gov.sa:8081/eservices/ittikaf/reg_seasonal_isolated.php

இதில் உள்ள வழிமுறைகள் உண்மையிலேயே மிகவும் சுலபமானது. உங்கள் பாஸ்போர்ட் அல்லது இகாமா விவரங்களை பதிய வேண்டும். பாஸ்போர்ட் மற்றும் இகாமா செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இணைய தளத்தில் பதிவு செய்ய :

http://eservices.wmn.gov.sa:8081/eservices/ittikaf/

மேற்கொண்டு உதவி பெற ஹரமைன்: விவகாரங்களை கவனிக்கும் துறையின் இணைய தளத்தில் பார்க்கவும்:
http://www.gph.gov.sa

Web Design by Srilanka Muslims Web Team