இறுதிக் கட்டத்தை நோக்கி ராஜபக்ச அரசு! ஹிருணிகா எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

இறுதிக் கட்டத்தை நோக்கி ராஜபக்ச அரசு! ஹிருணிகா எச்சரிக்கை..!

Contributors
author image

Editorial Team

ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டால் வீதியில் செல்லும் சாதாரண நபர்களையும் மக்கள் தாக்குவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய பெண்கள் சக்தியின் தவிசாளருமாக ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய ஆட்சியின் கீழ் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டளவில் நாட்டு மக்களுக்கு சாப்பிட உணவும் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் நான் கூறிய எதிர்வுகூறல்கள் தற்போது உண்மையாகி வருவகின்றது. தமக்கு சேதனப் பசளை வேண்டாம் எனவும் எமக்கு உங்களது இலவச பசளை பொதி தேவையில்லை. கடைகளுக்கு பசளைகளை விநியோகியுங்கள் நாங்கள் பணத்தை கொடுத்து பசளைகளை கொள்வனவு செய்கிறோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் பால் மாவை கொள்வனவு செய்ய தற்போதும் வரிசையில் நிற்கின்றனர். அரசாங்கம் அவற்றை உணரவில்லை என்றால், அரசாங்கத்திற்கு தொழு நோய் ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம். 2022ஆம் ஆண்டளவில் சாப்பிடவும் முடியாமல் போகும் என நான் அன்று கூறினேன். தற்போது இறுதி காலம் நகர்ந்துக்கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு உண்ண உணவில்லை. குடிக்க நீரில்லை. சமைக்க சமையல் எரிவாயு இல்லை.

அத்துடன் பெட்ரோலும் இல்லை. மக்கள் தற்போது பொம்மைகள் மீதே தாக்குதல் நடத்துகின்றனர். உண்மையில் எதிர்காலத்தில் ராஜபக்சவினர் வெளியில் இறங்கி வீதியில் செல்ல முடியாமல் போகும்.

ராஜபக்ச என்ற பரம்பரை பெயரை கேட்டால் வீதியில் செல்லும் சாதாரண நபர்களையும் மக்கள் தாக்குவார்கள். அந்தளவுக்கு ராஜபக்ச என்ற பெயர் அழிந்து போய்விட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team