இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club அங்கத்தவர்கள் ஆயத்தம்..! - Sri Lanka Muslim

இலங்கைக்காக கடன் சலுகை திட்டத்தை ஆரம்பிக்க Paris Club அங்கத்தவர்கள் ஆயத்தம்..!

Contributors
author image

Editorial Team

இலங்கைக்காக கடன் சலுகை திட்டமொன்றை ஆரம்பிக்க பெரிஸ் கிளப் (Paris Club) அங்கத்தவர்கள் தயாராகி வருகின்றனர்.

Paris Club அங்கத்தவர் அல்லாத இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கும் Paris Club அங்கத்தவர்கள் குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை Paris Club அங்கத்தவர் குழு வரவேற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team