இலங்கைக்கு உதவ ஐக்கிய அரபு இராச்சியம் தயார் - Sri Lanka Muslim

இலங்கைக்கு உதவ ஐக்கிய அரபு இராச்சியம் தயார்

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ராஷித் அல் மக்தூம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

இச்சந்திப்பின்போது ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளதாக ஷேக் முஹமட் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்.

டுபாயில் நடைபெற்ற இந்த சுமுகமான பேச்சுவார்த்தையில் இலங்கையின் நிலைமைகளையும் கள யதார்த்தங்களையும் தாம் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஷேக் முஹமட் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஷேக் முஹமட் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

சனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய பிரதமர் ஷேக் முஹமட், பல வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இலங்கையில் தற்போது முதலீட்டுக்கான சிறந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team