இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய சூழல் காணப்படுகிறது – ரில்வின் சில்வா » Sri Lanka Muslim

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய சூழல் காணப்படுகிறது – ரில்வின் சில்வா

Contributors

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடிய அச்சுறுத்தலான சூழல் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தங்கல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஹம்பாந்தோட்டை, மாவட்ட அபிவிருத்தி அலுவலகம் இன்று தங்கல்லை பள்ளிக்குடாவை பிரதேசத்தில் ரி்ல்வின் சில்வா திறந்து வைத்தார்.

அக்காலத்தில் இலங்கையை தானியக் களஞ்சிய சாலையாக அடையாளப்படுத்தினார்கள். தற்போது என்ன நடந்துள்ளது. தற்போது இலங்கை மதுசாலையாகவே திகழ்கின்றது. நாட்டின் அரசியல் முறைமை சீரழிக்கப்படுகின்ற நிலையில் அதேபோன்று நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கப்படும் போது இதனை தடுப்பது பொலிஸாரின் செயற்படாகும்.

ஆனால் இன்று பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவையும் தற்போது சீரழிந்துள்ளது. அமைச்சர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் தமது பணிகளை செய்யாது ஏனைய அனைத்தையும் செய்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இது சர்வதேச விசாரணை தொடர்பானது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்ட்டால் அது மிகவும் ஆபத்தானதாகும். உண்மையான நாட்டுப்பற்றுள்ள அரசாங்கம் என்றால் இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தலை நடத்தாது.(nf)

Web Design by Srilanka Muslims Web Team