இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு அல்ஹிக்மா மாணவன் தெரிவு! - Sri Lanka Muslim

இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு அல்ஹிக்மா மாணவன் தெரிவு!

Contributors

17 வயதுக்குட்பட்ட இலங்கைத் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொழும்பு 12 அல் ஹிக்மா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் முஹம்மது பாஸில் ஹஸன் முஹம்மது பாதிஹ் தெரிவாகியுள்ளார்.

அண்மையில் தேசிய ரீதியில் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில் உள்வாங்கப்பட்ட முப்பது வீரர்களில் ஒருவரான பாதிஹ் பயிற்சிகளின் பின் இறுதித் தேர்வில் தெரிவாகினார்.

இலங்கையில் நடைபெறவிருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பில் பங்களாதேஷ்-இலங்கைக்கிடையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (05) நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோர் அணியில் களமிறங்குகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team