இலங்கையின் கைத்தொழில் துறை மேம்பாடுகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது - அமைச்சர் றிசாத் பதியுதீன் - Sri Lanka Muslim

இலங்கையின் கைத்தொழில் துறை மேம்பாடுகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது – அமைச்சர் றிசாத் பதியுதீன்

Contributors

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –

இலங்கையின் கைத்தொழில் துறை மேம்பாடுகளுக்கு தனியார் துறையினரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என கைத்தொழில் வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தணை துார நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் தொம்பே பிரதேசத்தில் நிர்மாணிக்கப்ட்டுள்ள அதி நவீன் கட்டிடத் துறைக்கு உகந்த பொருட்களை தயாரிக்கும் தொழில் பேட்டையினை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று இலங்கை ஆசியாவின் முக்கிய மையமாக கைத்தொழில் மூலம் பரிணமித்துள்ளது.இதனால் ஏனைய நாடுகள் இலங்கையினை நோக்கி முதலீடு மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக வருகின்றதை நாம் காணலாம்.எமது நாட்டினை பொருத்த வரையில் தற்போது போட்டித் தன்மை கொண்ட பொருளாதார வளர்ச்சியினை நோக்கி நகர்கின்றது.உள்நாட்டு அபிவிருத்திக்காக பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜனாதிபதியின் செயற்பாடு இன்று எமது பொருளாதார அதிகரிப்புக்கு வித்திட்டுள்ளது.மக்கள் கருத்திட்டங்கள் மூலம் நாட்டின் தேசிய உற்பத்திகளுக்கு அவர்கள் உழைப்பு மூலதனமாக இடப்படுகி்ன்றது.

இது தான் இந்த நாட்டின் தொழில் வர்க்கத்தின் அதி கூடிய பங்களிப்பாகும்.குறைந்த ஆட்பலத்துடன்இநவீன இயந்திரங்களின் கையால்கை குறித்து தொழிலாளர்களுக்கு சிறந்த பயிற்சியளிக்கப்படுகின்றது.

இதனை இந்த தொழிற்சாலையும் செய்யவுள்ளதை பார்க்கின்ற போது நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.இவ்வாறான தொழிற் பேட்டைகள் மேலும் உருவாக்கப்படுவதன் மூலம் அதிகமான தொழில் வாயப்புக்கள் உருவாக்ககப்படுகின்றன.அரச துறைக்கு சமமனாக தனியார் துறையும் இன்று தமது பங்களிப்பினை செய்கின்றது.

இது தான் ஒரு ஜனநாயக நாட்டின் இலட்சனங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டின் அபிவிருத்தியின் மூலம் தான் பிரதேச மக்களின் வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கமுடியும் என்றும் கூறினார். இந்த நிகழ்வில் கைத்தொழில்இவணிகத் துறை பிரதி அமைச்சர் லக்ஷ்மன்வசந்த பெரேராஇஅமைச்சன் செயலாளர் அநுர சிறிவர்தன உட்பட அரசைியல்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team