இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமெரிக்கா அவதானம்..! - Sri Lanka Muslim

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அமெரிக்கா அவதானம்..!

Contributors
author image

Editorial Team

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ், வொஷிங்கடனில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை மக்கள் முகங்கொடுத்து வரும், உணவு, மின்சாரம், மருந்து மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட கால பொருளாதார கொள்கையினை வகுத்து இதற்கான தீர்வினை பெறுமாறும், அமைதியான வகையில் இடம்பெற்ற போராட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடன் சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team