இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி - Sri Lanka Muslim

இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு ஐநா உதவும்!- சுபினாய் நன்டி

Contributors

இலங்கையின் நீண்டகால நல்லிணக்கத்துக்கு உதவ தாம் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது . ஐக்கிய நாடுகளின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நன்டி இந்த கருத்தை நேற்று மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் இலங்கையுடன் புதிய சுற்றோட்ட ஒத்துழைப்பை பேண முயற்சிக்கிறது.

இது சர்வதேச உடன்படிக்கைகளுக்கு ஏற்புடைய வகையில் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள உரிமைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படும் என்று நன்டி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நடந்து முடிந்த தேர்தல் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல் வடக்கின் மக்கள் கலந்துரையாடல்களின் மூலம் அதிகாரங்களை பகிர்ந்து நல்லிணக்கத்துக்கு உதவ வழிவகுத்துள்ளது.

இலங்கையின் வடக்குகிழக்கு மக்களுக்கு பாதை உட்பட்ட கட்டமைப்பு வசதிகள் கிடைத்துள்ளன. எனினும் அரசியல் ரீதியான தீர்வுகளுக்கான முயற்சிகள் கவனமாக மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

இதற்காக கலந்துரையாடல்கள் மூலம் உரிமைகளை பெற்றுக்கொடுககும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதற்கான முயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உதவும் என்று நன்டி குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team