
இலங்கையின் முதலாவது அரபு மொழிப் பேராசிரியராக கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய நாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். சலீம் அரபு மொழி பேராசிரியராகப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார். இப்பதவியுயர்வு அரபு மொழியில் இவர்களுக்குள்ள புலமைத்துவத்துக்குக் கிடைத்த கௌரவமாக கொள்ளப்படுகின்றது.
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் எம்.எஸ்.எம். சலீம் மாவடிப்பள்ளி முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதய கமு/ அல் – அஸ்ரப் மஹா வித்தியாலயம்) தனது கல்விப் பயணத்தை ஆரம்பித்து அங்கேயே ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து. பின்னர் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியில் கற்றதன் பின்னர் இந்தியாவின் லக்னோ தாருள் உலூம் நத்வதுல் உலமா அரபுக் கல்லாசாயின் அரபு மொழி மற்றும் இலக்கிய பீடத்தில் கற்று முதலாம் நிலை அதிவிஷேட சித்தியுடன் தனது இஸ்லாமிய கற்கையை நிறைவு செய்தார். 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரும் சீர்திருத்தவாதியுமான அல்லாமா அபுல் ஹஸன் நத்வி அவர்களின் நேரடி மாணவராக பேராசிரியர் இருந்துள்ளமை விஷேட அம்சமாகும்.
நூருல் ஹுதா உமர்-
More Stories
இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள்,...
அக்கரைப்பற்றில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் காத்தான்குடியில் மீட்பு!
அக்கறைப்பற்றில் களவாடப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் கைப்பற்றட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்....
மருந்துகளின் விலைகள் விரைவில் குறைப்பு!
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார...
முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி!
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் (16) நடைபெற்ற...
கிழக்கு புதிய ஆளுநருக்கு முபாறக் மௌலவி வாழ்த்து!
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசஇங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும்...
மீண்டும் கொரோனா அலை?
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணமும்,...