இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை கேகாலையில் - Sri Lanka Muslim

இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை கேகாலையில்

Contributors

-ஏ.எல்.ஜுனைதீன்-

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை கேகாலையில் பெருமையுடன் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்திருக்கிறது.

இது தொடர்பான ( அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை இல:31ஃ2013 ) சுற்றறிக்கையை அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.வீ.அபேகோன் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

கேகாலையில் நடைபெறவிருக்கும் பிரதான வைபவத்திற்கு ஒருங்கிணைவாக மாகாணம் மற்றும் மாவட்ட மட்டத்திலும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு அமைச்சரவை அமைச்சுத் துணைக் குழு தீர்மானித்துள்ளது.

பிரதான வைபவத்திற்கு ஒருங்கிணைவாக தேசியக் கொடி ஏற்றலும் தேசியக் கீதம் பாடுதலும் (தேசியக் கொடி ஏற்றுதல் 2014.02.04 ஆம் திகதி மு.ப 8.50) எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

 

Web Design by Srilanka Muslims Web Team