இலங்கையில் தொடர்ந்தும் சந்தேக நபர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் – மனித உரிமை கண்காணிப்பகம்! - Sri Lanka Muslim

இலங்கையில் தொடர்ந்தும் சந்தேக நபர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் – மனித உரிமை கண்காணிப்பகம்!

Contributors

இலங்கையில் தொடர்ந்தும் சந்தேக நபர்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. காணாமல் போதல்கள் தொடர்பில் 5000த்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் குறித்த விசாரணைகள் நிலுவையில் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும் இதனால் சந்தேக நபர் ஒருவரை குற்றச்சாட்டுக்கள் இன்றி 18 மாதங்கள் வரையில் தடுத்து வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் இடம்பெற்ற சந்தேக நபர்கள் மீதான சித்திரவதைகள் குறித்த பத்து சம்பவங்கள் பற்றிய தகவல்களை மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்தும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். குறிப்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
-gtn

Web Design by Srilanka Muslims Web Team