இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பொத்தம் உதவு நடைப் பயணம்! நாளை கிளிநொச்சியில் ஆரம்பம் - Sri Lanka Muslim

இலங்கையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பொத்தம் உதவு நடைப் பயணம்! நாளை கிளிநொச்சியில் ஆரம்பம்

Contributors

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேர் இயன் பொத்தம் நாளை நவம்பர் முதலாம் திகதி முதல் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள உதவு நடைப் பயணத்தில் உலகளாவிய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நடைப்பயணத்தின் மூலம் வடக்கில் செரிட்டி ஒப் பௌன்டேசன் குட்னஸ் என்ற உதவு அமைப்பு ஒன்று நிறுவப்படவுள்ளது.

இதன்படி, இயன் பொத்தமுடைய உதவு நடைப் பயணத்தில் அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அலன் போடர்,  ஸ்டீவ் வோ, இந்திய முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சவ்ரவ் கங்குலி ஆகியோரும் பங்கேற்கவுள்ளனனர்.

இலங்கை அணி வீரர்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் போன்றோரும் இந்த நடைப் பயணத்தல் இணைந்து கொள்ளவுள்ளனர்.

நாளை நவம்பர் முதலாம் திகதி காலை 8 மணிக்கு இந்த நடைப்பயணம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டு மாங்குளத்தில் நிறைவுபெறவுள்ளது.

பொத்தம் ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இரத்தப் புற்று நோய் ஆராய்ச்சிக்காக நடத்திய நடைப் பயணத்தின்போது 1.600.000 பவுன்ட்ஸ்கள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இயன் பொத்தமின் நடைப்பயண அட்டவணையின் அடிப்படையில்,

நாளை நவம்பர் முதலாம் திகதி – கிளிநொச்சி மத்திய வித்தியாலயம்- மாங்குளம் கிரிக்கட் மைதானம்

நவம்பர் 2- அநுராதபுரம் கார்கில்ஸ் பூட் சிட்டி –மிகுந்தலை பாடசாலை மைதானம்

நவம்பர் 3- சிகிரியா மலை- தம்புள்ளை மைதானம்

நவம்பர் 4-  கண்டி கார்கில்ஸ் பூட் சிட்டி- பின்னவெல யானைகள் சரணாலயம்

நவம்பர் 5- கொழும் காலிமுகத்திடல் -பிரேமதாஸ மைதானம்

நவம்பர் 6-  அம்பாந்தோட்டை கார்கில்ஸ் பூட் சிட்டி- அம்பாந்தோட்டை பொது மைதானம்

நவம்பர் 7- மாத்தறை கார்கில்ஸ் பூட் சிட்டி- போட்டிஸ் ஹோட்டல்

நவம்பர் 8- காலி பூட் சிட்டி- சீனகம கிரிக்கட் மைதானம்

Web Design by Srilanka Muslims Web Team