இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம் - Sri Lanka Muslim

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம்

Contributors

முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது. இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய அரசு டிசெம்பர் 26 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து,கொழும்பில் உள்ள இந்திய தூதுவரலாயம்,ஏனைய துணை தூதுவரயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசு கருதுகிறது.

பங்களாதேசத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1971 ல் நடந்த விடுதலை போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மன்றம் அப்துல் காதிர் முல்லா 344 நபர்களை அப்போது கொன்ற குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிலும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, டிசெம்பர் 12 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டதை  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.-தமிழ் மிரர்

The Indian High Commission in Colombo has written to Sri Lankan government requesting it to enhance security given to Indian diplomatic offices in Sri Lanka to prevent an attack by Muslim extremist groups, the Daily Mirror learns.

The request has been made by the Indian government in a letter written to Secretary of the External Affairs Ministry on December 26th.  India has expressed fears of a possible attack on Indian mission in Colombo or consular offices in other parts of the country in the aftermath of the execution of Jamaat-e-Islami leader Abdul Qadir Mullah in Bangladesh.

Abdul Qadir Mullah was sentenced to death by the Bangladesh’s International crimes Tribunal set up to investigate into the crimes committed during the 1971 liberation war.  Mullah who was found guilty of the murders of 344 persons and dozens of other war crimes was hung on December 12.

Interestingly the statement comes a few weeks after a meeting the high commission officials had with Sri Lankan Muslim leaders where comments made by Defence Secretary Gotabaya Rajapaksaon threats by extremist Muslim elements, was discussed extensively.-Daily Mirror

Web Design by Srilanka Muslims Web Team