இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையால் 28,158 படையினர் மரணம் - Sri Lanka Muslim

இலங்கையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கையால் 28,158 படையினர் மரணம்

Contributors

இலங்கையில் 1980ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28,158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால் முப்படைகளையும் சேர்ந்த 24,992 பேரும் பொலிஸ் படையில் 2,159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28,158 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கூட இராணுவ வைத்தியசாலைகளில் நிகரான இடங்களிலும் 357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை போரில் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக இதுவரை 92.39 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக செலுத்தப்பட்டுள்ளது.

1971 மற்றும் 1988, 1989 காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் காரணமாக மேற்படி படைப் பிரிவுகளைச் சேர்ந்த 883 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக்காலப்பகுதியில் 320 பேர் அங்கவீனமாகினர். இவர்களுக்கு நஷ்ட ஈடாக 37.97 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.lw

Web Design by Srilanka Muslims Web Team