இலங்கையுடன் நட்புறவு ஊக்குவிப்பு; கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றிருந்த ஜப்பானிய கப்பல்கள்! - Sri Lanka Muslim

இலங்கையுடன் நட்புறவு ஊக்குவிப்பு; கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றிருந்த ஜப்பானிய கப்பல்கள்!

Contributors

ஜப்பானிய கடல் சுயபாதுகாப்பு படையின் (JMSDF) இரு கப்பல்களான JS KASHIMA மற்றும் JS SHIMAKAZE ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு 2022 மே 19 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வருகை தந்திருந்தன.

JMSDF இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயிற்சியின் அடிப்படையில் இந்த வருகை அமைந்திருந்தது.

ஜப்பானிய பயிற்சி செயலணியினால் இந்த வெளிநாட்டுப் பயிற்சி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த ஆண்டின் இரு கப்பல்களின் பயணத்தை பயிற்சி செயலணியின் கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் KOMUTA Shukaku வழிநடத்தியிருந்தார். சுமார் 550 அதிகாரிகள் மற்றும் அங்கத்தவர்கள் இந்த பயணத்தில் பங்கேற்றதுடன், இதில் 160 புதிதாக இணைந்து கொண்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் பயிற்சிப் பயணத்தின் நோக்கம், புதிதாக இணைந்து கொண்ட அதிகாரிகளுக்கு கடலில் பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்து, விஜயம் செய்யும் நாடுகளில் நட்பான உறவுகளை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது.

இந்த விஜயத்தின் போது, பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கையிலுள்ள ஜப்பானிய சமூகத்தாரின் பங்கேற்புடன் வரவேற்பு வைபவம், இலங்கை கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை கடற்படையின் பிரதி பிரதான அதிகாரி ஆகியோரின் நட்பு சந்திப்பு, கடற்படைத் தளபதி, கப்பல் அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்பில் இடம்பெற்ற கப்பலில் மதிய உணவு வேளை, பொரளை ஜப்பானிய மயானத்தில் நினைவுகூரல் நிகழ்வு, இடைக்கால Charg d’ Affaires ad அதிகாரி KASTUKI மற்றும் இலங்கை கடற்படையின் கடல் செயற்பாடுகளின் பணிப்பாளர் கொமாண்டர் MHN பீரிஸ் சந்திப்பு, இலங்கை கடற்படையின் இரு கப்பல்களான ‘பராக்கிரமபாகு’ மற்றும் ‘சயுரல’ ஆகியவற்றுடன் கொழும்பு டொக்யார்ட் பி.எல்.சி ஆகியன தொடர்பான ஆராய்வு விஜயம், இலங்கையிலுள்ள ஜப்பானியர்கள் ஜெனரல் சேர் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கடெட்களுடனான கப்பல் விஜயம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை கடற்படை கப்பல் ‘சயுரால’ உடன் இரு கப்பல்களும் மே 21ஆம் திகதி நட்பு ரோந்து செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இதன் போது, இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலமாக கட்டியெழுப்பப்பட்டிருந்த நட்புறவு வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், மேம்படுத்திய தந்திரோபாய ஆற்றல்களையும் அவதானிக்க முடிந்தது.

பரஸ்பர கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதில் பங்களிப்பு வழங்கியிருந்தது. இது ‘Free and Open Indo-Pacific’ என்பதைக் குறிப்பதாக அமைந்திருந்தது.

JMSDF மற்றும் இலங்கை கடற்படை இடையே மற்றுமொரு அடையாள நட்பு ரீதியான பரிமாற்றமாக அமைந்திருந்ததுடன், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருட பூர்த்தியை குறிக்கும் நிகழ்வுகளின் அங்கமாகவும் அமைந்திருந்தது.

Web Design by Srilanka Muslims Web Team