இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி - Sri Lanka Muslim

இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து திரில் வெற்றி

Contributors

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில்  நியூசிலாந்து அணி டக்வத் லூயில் விதிமுறைப்படி நான்கு விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி 23 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, மழை குறுக்கிட்டது.

மழையால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டதால் இலங்கை அணியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு 23 ஓவர்களில் 198 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற இலக்கு நியூசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 23 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இலங்கை சார்பில் சங்கக்கார 71, தில்ஷான் 55, நியூசிலாந்து சார்பில் லத்தம் 86, ரொன்சி 49 நதன் மெக்கலம் 32 ஓட்டங்களைப் பெற்றனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக லத்தம் தெரிவானார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்று ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team