இலங்கையை வெறுக்கின்றவர்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி » Sri Lanka Muslim

இலங்கையை வெறுக்கின்றவர்கள் குறித்து ஜனாதிபதி அதிருப்தி

Contributors

qout41

சுதந்திரத்தையும், அபிவிருத்தியையும் ஏற்றுக் கொள்ளாத, இலங்கையிலேயே பிறந்து இலங்கை வெறுக்கின்றவர்கள் குறித்து அதிருப்தி அடைவதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையை விமர்சிக்கின்ற சில நாடுகள், இலங்கையில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் தொடர்பில் மொளனம் காத்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல் மிகுந்த நாடாக இங்கை கடந்த காலங்களில் காணப்பட்டது.

ஆனர் தற்போது வடக்கில் இருந்து தெற்கு வரையில் அச்சம் இன்றி சுதந்திரமாக பயணிக்க முடீந்தள்ளது.

30 வருட கால யுத்தம் நிறைவு செய்யப்பட்டு, விரைவான அபிவிருத்தி நோக்கி இலங்கை செல்கிறது.

நாட்டை அச்சுறுத்திய வடக்கின் இளைஞர்கள் தற்போது புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team