இலங்கை அணி மீதான தாக்குதல்: சந்தேகநபரின் பிணை நிராகரிப்பு - Sri Lanka Muslim

இலங்கை அணி மீதான தாக்குதல்: சந்தேகநபரின் பிணை நிராகரிப்பு

Contributors

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் சூத்திரதாரியான சுபைர் அல்லது நைக் மொஹமட்டின் பிணையை லாகூர் உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை நிராகரித்தது.

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் சூத்திரதாரியான சுபைர் அல்லது நைக் மொஹமட்டுக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்யக்கோரும் பஞ்சாப் அரசாங்கத்தின் மனுவை லாகூர் மேல் நீதிமன்றத்தின் விசேட நீதியரசர் குழாம் ஒக்டோபர் 28 வரை ஒத்திவைத்திருந்தது.

பயங்கரவாத எதிர் நீதிமன்றத்தினாலேயே அவருக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது. அந்த பிணையே லாகூர் உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள  சுபைர் இந்த தாக்குதலில் பிரதான குற்றவாளி எனவும் பாதுகாப்பு கமரா பதிவின் உதவியுடன் தாம் இவரை கைது செய்ததாகவும் பஞ்சாப் மேலதிக வழக்கு தொடருநர் நாயகம் அப்துல் சமத் முன்னர் கூறியிருந்தார்.

தனது உயிருக்கு ஆபத்துள்ளதென கூறியதால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராக தேவையில்லை என்றும் பயங்கரவாத எதிர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த தாக்குதலில் இவர் பங்குபற்றியதற்கு அத்தாட்சிகள் ஏராளமிருந்தபோதும் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அவற்றை கவனிக்காது அவருக்கு பிணை வழங்கியது என நீதியரசர் குழாமிடம் கூறியிருந்தார்.

வழக்கு தொடருநர் சுபைருக்கு வழங்கிய பிணையை இரத்து செய்து அவரை கைது செய்யும்படி நீதிமன்றிடம் கோரிநின்றனர். அதனை நிராகரித்த நீதிமன்றமே வழக்கை ஒக்டோபர் 28 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.tm

Web Design by Srilanka Muslims Web Team