இலங்கை அணி 7 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு பயணம் - Sri Lanka Muslim

இலங்கை அணி 7 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு பயணம்

Contributors

இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி அங்கு பயணமாகின்றது.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு பாகிஸ்தான் அணியுடன் 2 இருபதுக்கு -20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது.

 

முதலாவது இருபதுக்கு -20 போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி டுபாயிலும் இரண்டாவது போட்டி 13 ஆம் திகதி டுபாயிலும் இடம்பெறவுள்ளன.

 

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி சார்ஜாவிலும் இரண்டாவது போட்டி 20 ஆம் திகதி டுபாயிலும் மூன்றாவது போட்டி 22 ஆம் திகதி  சார்ஜாவிலும் இடம்பெறவுள்ளன.

 

Web Design by Srilanka Muslims Web Team