இலங்கை அமைச்சர்களுக்காக வருடத்திற்கு 350 கோடி ரூபா செலவிடப்படுகிறது: பீ.ஹரிசன் பா.உ - Sri Lanka Muslim

இலங்கை அமைச்சர்களுக்காக வருடத்திற்கு 350 கோடி ரூபா செலவிடப்படுகிறது: பீ.ஹரிசன் பா.உ

Contributors

இந்நாட்டு அமைச்சரவைக்காக வருடம் ஒன்றிற்கு 350 கோடி செலவிடப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அமைச்சர்கள் அநேக காலங்களில் தமது பிரதேசங்களில் இருப்பதில்லை எனவும் அவர்களுக்காக பெருந்தொகையான பணம் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அமைச்சர்களது எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மகாவலி திட்டம் போன்ற இரண்டு திட்டங்களை மேற்கொள்ள முடியும் என ஹரிசன் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team