இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பிப்பு - Sri Lanka Muslim

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பிப்பு

Contributors

2(2457)

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 11 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்தோடு, விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த போதிலும், இனியும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய பயிற்றுவிப்பாளரான கிரஹம் ஃபோர்ட் தனது 2 வருட கால ஒப்பந்த முடிவில், அதனைப் புதுப்பிக்காது தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில், புதிய பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்களை இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது.

இதன்போது ஞாயிற்றுக்கிழமை வரை 6 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் 11 பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 11 பேரில் 8 பேர் வெளிநாட்டவர்கள் எனவும், 3 பேர் இலங்கையர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

விண்ணப்ப காலத்திற்குள் விண்ணப்பிக்காத சிலர் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதன் காரணமாக, அது தொடர்பாக ஆராய்ந்து, முடிவொன்றை எடுப்பதற்காக செயற்குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ரஞ்சித் பெர்னான்டோ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் செயற்குழுவில் நிஷாந்த ரணதுங்க, சனத் ஜெயசூரிய, ஆஷ்லி டீ சில்வா, ஜெரோம் ஜெயரத்ன, மொஹான் டீ சில்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team