இலங்கை – சவூதி அரேபியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை - Sri Lanka Muslim

இலங்கை – சவூதி அரேபியா இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

Contributors

சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இலங்கை வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சுக்கும் இடையில் தொழிலாளர்கள் தொடர்பில் முதல் முறையாக உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இதுபோன்ற எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனிய குறிப்பிடுகின்றார்.

வீ்ட்டுப் பணிப்பெண்களின் பாதுகாப்பு, பணியாளர் உரிமைகளை இந்த உடன்படிக்கையின் மூலம் பேணுவதற்கு முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.(nf)

Web Design by Srilanka Muslims Web Team