இலங்கை - நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை - Sri Lanka Muslim

இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

Contributors

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி, ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில்  இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் நியூஸிலாந்து அணி 4.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.

மழை தொடர்ந்தமையின் காரணமாக இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி கைவிடப்பட்டது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20க்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team