இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களுடன் புதிய இணையத்தளம்! - Sri Lanka Muslim

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களுடன் புதிய இணையத்தளம்!

Contributors

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த புதிய இணையத்தளத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் தகவல்கள், அவர்களின் உரைகள் போன்ற விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனத்தின் உறுப்பினர் சுரேகா சமரசேன தெரிவித்தார்.

http://www.manthri.lk என்ற இந்த இணையத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.-TC

Web Design by Srilanka Muslims Web Team