'இலங்கை மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்' - சம்பிக்க ரணவக்க! - Sri Lanka Muslim

‘இலங்கை மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்’ – சம்பிக்க ரணவக்க!

Contributors

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அதிக உற்பத்தி செலவை காரணம் காட்டி இலங்கை மின்சார சபை கட்டணங்களை கணிசமாக அதிகரித்தது.

கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை தனது வருவாயை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை புலப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே நிதிப் பிரச்சினைகள் மற்றும் சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் காரணமாக மின்சார சபைக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team