இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சிங்கள மொழியிலான ஓர் தொகுப்பு நூல் வெளியீடு..! - Sri Lanka Muslim

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சிங்கள மொழியிலான ஓர் தொகுப்பு நூல் வெளியீடு..!

Contributors

தமிழ் இலக்கித்துறையில் தடம் பதித்துவரும் மலையக முஸ்லிம் பெண் எழுத்தாளரான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் முயற்சியினால் “மின்னும் தாரகைகள்” எனும் தமிழ் மொழியில் வெளிவந்த அவரது நூலின்  சிங்கள மொழியாக்கமாக “திதுலன தாரக்கா” எனும் நூல் கொழும்பில் வெளியிடப்பட இருக்கின்றது.

இந் நூலானது இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சிங்கள மொழியிலான ஓர் தொகுப்பாகும். 
இந்த நூலின் வெளியீட்டு விழாவானது எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை (04.12.2021) கொழும்பு, அல்-ஹிதாயா தேசியக்கல்லூரி பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.
தினகரன், தினகரன் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ் வெளியீட்டு விழாவில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்லைவரான காதர் மஸ்த்தான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அல்-ஹாஜ் இப்றாகீம் அன்ஸார், இலங்கை மகளிர் பணியக பணிப்பாளர் திருமதி. சம்பா உபசேன, இலங்கை வானொலி பணிப்பாளர் நாயகம், திருமதி. மயூரி அபேசிங்க, பொது நிருவாக அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. மாலா பஸ் நாயக்க, தொழிலதிபர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.ரி.பஹார்தீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாசின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இவ் விழாவில்,தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் அரபு மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் நூலாசிரியரின் அறிமுக உரையை தமிழிலும், அரச தகவல் திணைக்கள முன்னாள் தெசத்திய பிரதம ஆசிரியர் சுனித் மாயாதுன்னே சிங்களத்திலும் அறிமுக உரையாற்றவுள்ளமை சிறப்பம்சமாகும்.
மேலும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன் நூல் நயவுரையும், பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் வாழ்த்துரையும் வழங்கவுள்ளனர்.

அதேவேளை கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பர், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட அதிகாரி சட்டத்தரணி, நூருல் சப்னா சிராஜுதீன் ஆகியோர்களின் கவிவாழ்த்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட்.

Web Design by Srilanka Muslims Web Team