இலட்சியங்களை திடப்படுத்தி இலக்குகளை அடையுங்கள் - பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி - Sri Lanka Muslim

இலட்சியங்களை திடப்படுத்தி இலக்குகளை அடையுங்கள் – பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி

Contributors

 புனர்வாழ்வு பெற்றவர்களுக்காக சமூகம் பல அர்ப்பணிப்புகளை செய்வது அவசியம்

* மனிதாபிமானம், ஜனநாயகம், பாலியல் சமநிலைக்கு இலங்கையில் முன்னுரிமை

* 2014ல் உலக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தீர்மானம்

 

இளமைப் பருவத்திலிருந்து எதிர்கால இலட்சியங்களை திடப்படுத்தி அந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பொதுநலவாய இளைஞர் மாநாட்டை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:-

 

நான் உங்களைப் போல் ஓர் இளைஞனாக இருந்த போது, ஏதாவதொன்றை சாதிக்க வேண்டுமென்று எனது வாழ்க்கையில் இலக்கு இருந்தது. நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட போது மிகவும் வயது குறைந்தவனாக இருந்தேன். அந்த வருடத்தை உங்களிடம் நான் கூற விரும்பவில்லை. நான் அதை தெரிவித்தால் என்னுடைய வயதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

அதனால் தான் நான் அந்த வருடத்தை கூறவில்லை. கடுமையான உழைப்பும், திடமான நோக்குடனும் பாடுபட்ட நான் பிரதம மந்திரியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து இன்று நாட்டின் ஜனாதிபதி

பதவியில் வீற்றிருக்கிறேன். எனக்கு முன் பேசிய இளம் பெண் கூறியது போன்று உங்களுக்கும் என்னைப் போன்ற வலுவும், வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற இலக்கும் இருக்கிறது. நீங்களும் நான் அடைந்த நிலையை அடைவதை எவரும் தடுக்க முடியாது என்று 2013 பொதுநலவாய இளைஞர் மாநாட்டை ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஜனாதிபதி தமது உரையில், “நாம் தேவையற்ற வாழ்க்கைக்கு தேவையான திறன்கள், தொழிலுக்கு தேவையான திறன்களை அறிமுகம் செய்துள்ளோம்” பரீட்சைகளில் தோல்வியுற்றவர்களை புறக்கணித்துவிடுவதை விட இதனை நாம் அறிமுகம் செய்துள்ளோம். பொதுநலவாய சித்தாந்தங்களுக்கு அமைய இவ்விதம் நாம் இவர்களுக்கு உதவி செய்தால் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியை மேலும் நெருக்கமாக்க முடியும் என்றும் கூறினார்.

இலங்கையின் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பொதுநலவாய அமைப்பின் இளைஞர் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள அனைவரையும் அன்பாக வரவேற்கிறேன். “ஒன்று சேர்க்கப்பட்ட அபிவிருத்தியை ஒன்றிணைந்து வலுவாக மேற்கொள்ளுதல்” என்ற தொனிப் பொருளில் இந்த இளைஞர் மன்ற மாநாடு ஒற்றுமையையும் அதன் மூலம் எந்தவொரு இலக்கையும் முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் 9ஆவது பொதுநலவாய இளைஞர் மாநாட்டினை அழகான இயற்கை காட்சிகளை கொண்ட ஹம்பாந்தோட்டையில் நடத்துவது பற்றி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் நாடு 3 தசாப்தங்களாக பயங்கரவாதத்தினால் சீர்குலைந்து போயிருந்த நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது எமது இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒரு சிறுவர் போராளியை அல்லது பலவந்தமாக பயங்கரவாதியினால் போராளியாக சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவரின் வரலாற்றை திரும்பிப் பார்ப்போமேயானால் இவர்கள் அனைவரும் தங்கள் இளம் பிராயத்தை மகிழ்ச்சியோடு கழிக்கும் வாய்ப்பை இழந்திருந்தனர் என்று கூறுவதை விட அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டதென்றே கூற வேண்டும்.

இளைஞர்கள் தாங்கள் பெரியவர்களாக மாற்றமடையும் காலப்பகுதியில் ஏற்படும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு பயங்கரவாதிகளால் தள்ளப்பட்டார்கள். இதனால் எமது இளைஞர்கள் பல்வேறு பெருமைக்குரிய வாய்ப்புகளை இந்த நீண்டகாலப் பகுதியில் இழந்தனர். பயங்கரவாதிகளினால் பலவந்தமாக சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களும் ஆயுதப் படையினருடன் சேர்ந்த பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சமூகத்தில் சேர்க்கப் பட்டனர்.

இந்த அப்பாவிகளை சமூகத்தில் சேர்த்துக் கொள்வதற்கு சமூகம் அவர் களுக்காக மேலும் பல அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும். எங்கள் நாட்டு இளைஞர்களை இந்த அதி உயர்ந்த பேரவையில் சேர்த்து அதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது விருப்பமாகும்.

பொதுநலவாய இளைஞர் பேரவை உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை நம்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வகை செய்துள்ளது. எங்கள் நாட்டில் என்றுமில்லாதவாறு சமாதானமும் அபிவிருத்தியும் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் இளைஞர் மன்றம் இங்கு கூடுவது எமக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு கலந்து கொள்ளும் இளைஞர்களில் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. போராளிகள் மற்றும் எங்கள் நாட்டின் பூர்வீக குடிகளின் பிரதிநிதி வலது குறைந்தோரின் ஒரு பிரதிநிதி என இலங்கை தூதுக்குழுவில் கலந்து கொண்டிருப்பது குறித்து நான் மிகவும் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நாம் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளுக்கு அமைய மனித மகத்துவம், சமத்துவத்தை பொதுநலவாய அமைப்பில் உள்ள மனித குலத்திற்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். இன்று 15 முதல் 24வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உலக சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினராவர். இவர்களில் 60 சதவீதமான இளைஞர்கள் ஆசியா கண்டத்தில் இருக்கிறார்கள். இலங்கையின் மொத்த சனத்தொகையில் 26 சதவீதமானோர் இளைஞர்களாவர். வலுப்பெற்ற பிரிவினரை பயன்படுத்தி எமது அபிவிருத்தி பணிகளை மேலும் முன்னேற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு பொருத்தமான சில உப தலைப்புகளை இங்கு ஏற்படுத்தியிருப்பதை நான் அவதானித்தேன். எமது நாட்டு இளைஞர்களுக்கு மாத்திரமின்றி உலக நாட்டுக்கும் இது பொருத்தமாகும். இங்கு இளைஞர்களின் தேவைகளை நாம் அவதானிக்கும் போது நாம் இன்னுமொரு விடயம் குறித்தும் மனம்விட்டு பேச வேண்டும். அதாவது, இளம் வயதினரை சமூகத்தில் உள்ள தீய பழக்கங்களில் இருந்து பாதுகாப்பதே இதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சில தீய பழக்கங்கள் ?வீன தொழில்நுட்பங்களின் ஊடாகவும் இளைஞர்களை வந்தடைகின்றன.

“நாம் தேவையற்ற வாழ்க்கைக்கு தேவையான திறன்கள், தொழிலுக்கு தேவையான திறன்களை அறிமுகம் செய்துள்ளோம்” பரீட்சைகளில் தோல்வியுற்றவர்களை புறக்கணித்துவிடுவதை விட இதனை நாம் அறிமுகம் செய்துள்ளோம். பொதுநலவாய சித்தாந்தங்களுக்கு அமைய இவ்விதம் நாம் இவர்களுக்கு உதவி செய்தால் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியை மேலும் நெருக்கமாக்க முடியும்.

இதன் மூலம் நீதி, நியாயமும் சமத்துவமும் உடைய சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

2012ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி என்ற யுனெஸ்கோ அமைப்பின் கண்காணிப்பு அறிக்கையில் இளைஞர் களையும், திறன்களையும் ஒன்றிணைத்து கல்வியை பயன்படுத்த வேண்டுமென்ற தொனியில் கல்விக்கு செய்யப்படும் முதலீடு நல்ல வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் என்றும் ஒரு டொலரை கல்விக்கு செலவிட்டால் அதன் மூலம் 10 முதல் 15 டொலர்களை பொருளாதார வளர்ச்சிக்கு பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் நாடும் இவ்விதம் இளைஞர்களின் திறனை பயன்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பால்நிலை சமத்துவத்திற்கு எங்கள் நாட்டின் அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கிறது. எங்கள் நாடே உலகின் முதலாவது பெண் பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவை பதவியில் அமர்த்திய பெருமைக்குரிய நாடாகும்.

சமூகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ பெண்களுக்கு எதிராக எவ்வித பாகுபாட்டையும் நாம் காண்பிப்பதில்லை. நாம் இளைஞர்களை அபிவிருத்தி செய்யும் எமது கொள்கைக்கு அமைய நவீன தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியை ஆதரிக்கிறோம். இன்று நம்நாட்டு மக்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள். 2016ம் ஆண்டில் 75 சதவீதமானோருக்கு இதில் நல்ல பரீட்சயம் ஏற்படும். எமது நாட்டில் 98 சதவீதமானோருக்கு எழுத, படிக்கத் தெரியும். இதன் மூலம் இளைஞர்களின் வலையமைப்பை ஏற்படுத்தி அவர்களை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சுகாதார பராமரிப்பில் நாம் எவ்வித பாகுபாடும் காண்பிப்பதில்லை. வறுமை காரணமாக சயரோகம், எச்.ஐ.வி. மற்றும் மலேரியா ஆகிய நோய்கள் பல நாடுகளை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கி யுள்ளன.

இவ்வாறான நாடுகளில் போதை வஸ்த்துக்கு அடிமையாகிய இளைஞர்களை காணக்கூடியதாக உள்ளது. புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள் இளைஞர்களின் வளர்ச்சியை உலகில் நெறிப்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். நவீன தொழில்நுட்பம் பொதுநலவாய நாடுகளின் இளைஞர்களுக்கு நோய்கள் பற்றிய அறிவுறுத்தல்களை கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு களுக்காக கூடுதலான முதலீடுகளை செய்வதன் மூலம் இளைஞர்களின் உடல் நிலையை வலுவாக வைத்திருக்க நாம் உதவ முடியும். இளைஞர் மன்றத் திட்டத்தின் கீழ் நீரிழிவு நோய்க்கான பாத யாத்திரை போன்றவை நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

இங்கு வருகை தரும் இளைஞர்கள் எமது நாட்டின் கடற்கரையோர விளையாட்டுகளிலும் ஏனைய விளையாட்டுகளிலும் ஈடுபட்டு எமது நீலக்கடற்கரையில் விளையாடி மகிழ வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பொதுநலவாய சாசனம் இளைஞர்கள் அபிவிருத்திக்கு ஊக்கமளித்து சமாதானம் ஜனநாயகம் ஆகியவற்றுடன் மக்களின் நலவுரிமைகளையும் பாதுகாப்பதற்கு உதவ முடியும் என்று நம்புகிறேன். இவர்கள் புரிந்துணர்வுடன் மற்றவர்களின் கலாசாரங்களையும் மதித்து நடக்க வேண்டுமென்பது எனது விருப்பமாகும்.

நான் அடுத்த இரண்டாண்டுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியில் இருப்பேன்.

இந்தக் காலப்பகுதியில் பொதுநலவாய அமைப்பின் இளைஞர் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக பழகி இளைஞர்களை மேம்படுத்தும் உன்னத இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கு சகல விதத்திலும் உதவிகளை செய்வேன் என்று உறுதியளிக்க விரும்புகிறேன்.

2014ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து உலகின் இளைஞர் மகாநாட்டை இலங்கை நடத்தவுள்ளது. இதுவே ஆசியாவில் நடைபெறும் முதலாவது மாநாடாகவும் இருக்கும். இம்மாநாட்டின் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததோர் திட்டத்தை அமைப்பதற்கும் எங்களால் முடியும்.

Web Design by Srilanka Muslims Web Team